மூட்டு வலி விரைவில் குணமாக மூலிகைத் தைலம்

11 comments


மூட்டு வலி ஏன் வருகிறது?


சித்த மூலிகை வைத்தியத்தில் வாதசம்பந்தமான நோய்களான கை கால் மூட்டு வலி , முதுகு வலி , கழுத்து வலி இது போன்று எந்த எலும்பு சம்பந்தமான வலிகளுக்கும் , அதிகமாக சிறு நீர் கழிக்க நேரிடும் மருந்து வகைகளைத்தான் அதிகம் கொடுப்பர்.

அது எதனால் எனப் பார்ப்போம் . இரத்தத்தில் உள்ள எலும்பையும் எலும்பைத் தேய்க்கும் காரணிகளையும் சிறு நீரகம் அகற்றி எலும்புக் கூட்டையும் ,அதனுள்ளிருக்கும் மச்சையையும் அழியாமல் பாது காக்கிறது .மேலும் இரத்தம் எப்போதும் காரத்தன்மையில்தான் இருக்க வேண்டும் ,அமிலத் தன்மைக்கு மாறக் கூடாது .பொதுவாக நாம் உண்ணும் உணவில் அதிக உரம் போட்ட (யூரியா) பொருட்களைக் சாப்பிடுவதாலும் ,அதிக யூரிக் அமிலம் உள்ள தக்காளி போன்ற பொருட்களை உண்பதினாலும் இரத்தம் அமிலத் தன்மைக்கு மாற ஆரம்பிக்கிறது .

இதனால் சுண்ணாம்பினால் ஆக்கப்பட்ட எலும்புகள் இரத்தத்தில் இருக்கும் அமிலத்தோடு வேதி வினை புரிந்து உப்பாகவும் தண்ணீராகவும் மாற்றப்படுவதால்,எலும்பு தேய்ந்து கரைய ஆரம்பிக்கிறது. மூட்டுக்களில் இரத்த நாளங்கள் அதிகம் வளைந்து நெளிந்து செல்வதால் அமிலத் தன்மைப் பாதிப்பு முதலில் மூட்டுக்களுக்குத்தான் வரும்.

இதுதான் எலும்புத் தேய்மானமே தவிர ,நாம் நடப்பதனாலோ அதிக வேலை செய்வதனாலோ இந்தத் தேய்மானம் நடப்பதில்லை.நம் மூட்டுக்கள் கதவின் தாழ்ப்பாள் அல்ல, தேய்ந்து போக அவை தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவை .தம்மைத் தாமே புதுப்பிக்க காரணமாகும் காரணிகள் குறைந்து , தேய்க்கும் காரணிகள் அதிகரிக்கும் போதுதான் மூட்டுக்களில் தேய்மானம் வருகிறது.

இந்தக்காரணமே, அனைத்து வகையான எலும்பு தேய்மான நோய்களுக்கும், பொருந்தும்.

தேய்ந்து போன எலும்பு மீண்டும் தம்மைத்தாமே, புதுப்பித்துக்கொள்ள,  தேங்காய்ப்பாலுடன் சிறிது சுக்குப்பொடி சேர்த்து, பருகிவரலாம்.

இனி , சதுரகிரி ஹெர்பல்ஸ் மூட்டுவலி மூலிகை தைலம் , எப்படி தயாராகிறது எனப்பார்ப்போம்!

இந்த மூட்டு வலித் தைலத்தில் அத்திப்பால் , சிற்றாமுட்டி ,விராலி , மயிலாடுங் குறும்பை ,கண்பலா மரப்பட்டை , பேராமுட்டி , மூக்கிரட்டை வேர் , கோரைக் கிழங்கு ,பிரண்டை,வேலி பருத்தி, வாதநாராயணன், வாதமடக்கி , முடக்கறுத்தான் , மற்றும் பல அரிய வகை மூலிகைகளைச்சேர்த்து எண்ணெயாக காய்ச்சி எடுக்கப்படுகிறது.

இந்த மூட்டு வலி தைலம், மூட்டு வலிக்காக மட்டுமல்ல , மூட்டுக்கள் பூட்டு விட்டுப் போதல் (DISLOCATION), இரத்தத்தில் எலும்புகளைத் தேய்க்கும் காரணிகளால் எலும்புகளிலும் , எலும்பு மூட்டுக்களிலும் ஏற்படும் தேய்மானம் (DEGENERATIVE OSTEOARTHRITIS OF THE JOINTS), எலும்பு முறிவு (FRACTURE ) , மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல் (LIGAMENT TEAR ), இரத்தக் கட்டு , கீழ் முதுகு வலி , பக்க வாதம் (single side and double side paralysis) போன்ற பல வியாதிகளைத் தீர்க்கும்.இதை மேற்பூச்சாகப் பூசி வர இதிலுள்ள அத்திப் பால் எலும்பை என்றும் ஒடியாத இரும்பாக்கும்.

எலும்பு முறிவு (FRACTURE) , மூட்டுக்களில் சவ்வு கிழிந்து போதல் (LIGAMENT TEAR), மூட்டுக்களில் மசகு இல்லாமல் சடசட எனச் சத்தத்துடன் வலி வருதல் , தசைப் பிடிப்பு (MUSCLE CRAMP), நரம்பு வலி(PAIN IN MOTOR VEINS) , நரம்பு இசிவு (INFLAMMATION IN MOTOR VEINS) , நரம்புகள் சுருண்டு கொள்ளுதல் ,சுழுக்கு மற்றும் வாதக் கோளாறுகள் (LOCO MOTOR DISORDERS ) , கழுத்தெலும்புத் தேய்வு (CERVICAL SPONDYLOSIS ),முதுகுத் தண்டு தட்டுக்கள் நழுவுதல் , கீழ் முதுகு வலி , பக்க வாதம் (single side and double side paralysis) போன்ற பல வியாதிகளை குணமாக்கும்.

மேலும் SCIATICA என்னும் பேராசன நரம்பு அழற்சி,ஒரு பக்க பக்க வாதம் , இரு பக்க பக்க வாதம், குறை பக்க வாதம்,ஆண்குறி வாதம் போன்றவற்றில் எந்தப் பாகம் செயல்படவில்லையோ அந்தப் பாகத்தை செயல்பட வைக்கும் .

ஆர்த்ரைடிஸ் எனப்படும் எலும்பு தேய்மான நோய்களால் உண்டாகும் கழுத்து வலி [ கழுத்து எலும்பு தேய்வால் ,கழுத்தில் காலர் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆங்கில மருத்துவ தத்துவத்திலிருந்து விடுதலை கிடைக்கும்], மற்றும் இடுப்பு வலி [ இடுப்பு எலும்பு தேய்வால் அதற்கும் பெல்ட் பரிந்துரைப்பர் அலோபதியில்] அதனால் உண்டாகும் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான இறுக்கங்கள், போன்ற அனைத்து வகை வேதனைகளையும் இந்த மூட்டு வலி தைலத்தை காலை மாலை இருவேளை தடவி, சில மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவிவிட, சிறப்பாக குறுகிய நாட்களில், தீர்த்து விடும்.


11 comments :

 1. அருமையான ஒரு தைலம். உபயோகித்ததில் முதுகுவலி நிவாரணம் கிடைத்தது.

  ReplyDelete
  Replies
  1. திரு.எஸ்.தத்தாதிரி அவர்களே!

   உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!
   தொடர்ந்து உபயோகித்து வாருங்கள், முதுகு வலி பிரச்னை முற்றிலும் தீர்ந்து விடும்.

   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete
  2. திரு கண்ணன், என்னுடைய பெங்களூர் சக பணியாளர் frozen shoulder ஆல் 10 மாதமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தைலம் கொடுத்தேன். அவர் இப்பொதெல்லாம் வலியில்லாமல் தூங்க முடிகிறது. முன்பெல்லாம் அவர் திடீர் என்று வலியில் துடிப்பது பார்த்திருக்கிறென். நன்றி.

   Delete
  3. உங்கள் பதிவிற்கு நன்றி, சித்தர்கள் நமக்கு கொடுத்த வரம் மூலிகைகள் என்று நாம் ஏற்கெனவே கூறியிருக்கிறோம், எனவே, நன்றியை , மனப்பூர்வமாக சித்தர்களின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்போம்!

   அடையாளம் காட்ட விரும்பாத , உங்கள் தனி மனித உரிமைக்குள், நாம் நுழைய விரும்பவில்லை, ஆயினும்,இங்கே உங்கள் பெயருடன் வாருங்கள்,பதிவை இருங்கள்! unknown பதிவர்களின் பதிவு இங்கே,மீண்டும் பதியப்படாது என்பதைத்தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது எமது தனிமனித உரிமை எனப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.


   என்றும் அன்புடன்,
   ஹெர்பல் கண்ணன்.

   Delete
 2. சரவணன்
  திருச்சி

  என் அம்மாவிற்கு நீண்ட நாட்களாக இடுப்பு வலி முழங்கால் வலி உள்ளது நீண்ட நாட்களாக உள்ளது ஆங்கில மருத்துவர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்தார்கள் சரிவரவில்லை திரு.கண்ணன் சார் அவர்களிடம் உள்ள மூட்டு வலி தைலம் வாங்கி உபயோக படுத்தினேன் மிகவும் அருமையான மருந்து கண்ணன் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி அதே போல என் நண்பன் ஒருவர் வண்டி சுமார் ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டர் செல்வார் அவருக்கும் முதுகு தண்டில் தேய்மானம் உள்ளது இனி வண்டி ஓட்ட கூடாது என்று கூறிவிட்டார்கள் வலி தைலம் உபயோகித்த பின்னர் நன்றாக உள்ளது திரு.கண்ணன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 3. திரு.சரவணன் அவர்களே!

  உங்கள் அன்னையின் நெடுநாள் இடுப்பு வலி, விரைவில் குணமானது குறித்து மிக்க மகிழ்ச்சி.மேலும், தங்கள் நண்பருக்கும், நமது மூட்டு வலி தைலத்தை பரிந்துரை செய்து, அவருக்கும் முதுகு வலி குணமடைய உதவியுள்ளீர்கள், உங்களின் இந்த சேவை பாராட்டுக்குரியது, நன்றி.

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 4. திரு.கண்ணன் அவர்களுக்கு வணக்கம், என் தாய் தந்தை இருவரும் தாங்கள் அளித்த மூலிகைத் தைலம் மிக அற்புதம் ஆக வேலை செய்கிறது என்று கூறுகிறார்கள், தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா மற்றும் தங்கள் சதுரகிரிக்கு வழி காட்டியமைக்கு கோடானு கோடி நமஸ்கார்ம்.

  இப்படிக்கு,
  மாகேஷ் பாபு

  ReplyDelete
 5. சித்தர்கள் நமக்கு அளித்த கொடை, மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்த அவர்தம் நூல்கள், நாம் கருவி மட்டுமே! உங்கள் பெற்றோர் நலம் பெற, எமக்கு வாய்ப்பு வழங்கிய சதுரகிரியில் உறையும் ஈசன் சுந்தர மகாலிங்கத்தை வணங்குகிறோம்.

  என்றும் அன்புடன்,
  ஹெர்பல் கண்ணன்.

  ReplyDelete
 6. அன்புள்ள திரு. கண்ணன் அவர்களே...! வணக்கம். இந்த மூலிகை தைலத்தினால் விபத்தில் அடிபட்ட எனது நண்பரின் எலும்புகள் குணம் பெற்றன. மிக அற்புதமான மருந்து. எனது மாமாவின் மூட்டுவலியை அறவே நீக்கியது இந்த மூலிகைத் தைலம். அருமை...! அருமை...!! அருமை...!!!

  என்றும் அன்புடன்

  செந்தில்குமார் (கொல்லிமலை காவல் துறை நண்பர்)
  வேலூர் மாவட்டம்

  ReplyDelete
 7. உங்கள் மருத்துவம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது (ஆர்த்ரைடிஸ் அனைத்து வலி நீக்கும் மூட்டு வலி தைலம், முடி உதிர்வை நிறுத்தும் ஹேர் ஆயில்).
  நான் மிகவும் மற்றவர்கள் அதை பரிந்துரைக்கிறோம்.

  ReplyDelete
 8. ஐயா இந்த தைலத்தை சென்னையில் எங்காவது வாங்க முடியுமா.
  எங்கே எப்படி பெற்றுக் கொள்வது.

  ReplyDelete