இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!                       
                              தமிழர்கள்  திருநாள் தை பொங்கலில் எல்லா வளமும்
நலமும் பெற்று வாழ்வில் தடைகள் நீங்கி மென்மேலும் செல்வ செழிப்புடனும், நோய் நீக்கி நலமுடன் வாழ தங்களுக்கும் தங்கள் குடும்பதார்க்கும். எங்கள் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

சதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள்அனைத்தும் நீங்கும்}

சதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள்அனைத்தும் நீங்கும்}

                                                           ஆலம் விழுது

        உடலில் பற்கல் வலிமை மிக்க உறுப்பாகும். எழும்புகளையும்,
நகங்களையும் விட மிகவும் கடினமானவை. இரட்டைப் பற்களாக
கடவாய்ப் பற்கள் மேலும் கீழுமாக  ( 8+ 8 = 16ம் ) முன்வாய்ப் பற்கள்
ஒற்றையாகப் பதினாறும், சுமார் 12 வது வரை  அவைகள் விழுந்து
திடமுள்ளதாக  முளைத்து வரும். பின் ஆயுட்காலம் முழுவதும்
அவைகளைக் காப்பாற்றுவது அவரவர் கடமையாகும்.

   சிரசிலிருந்து ஊறி வரும் அமிலத்தால் ஈறு நொந்து புண்ணாகியும்
தடிப்பாகியும், பலவீனபடுவதாலும் இரட்டைப் பற்களில் நடு நரம்பு
கிருமியால் கறுநிறங் கொண்டு, பற்புழுவின் கொடுமையால் பற்கள்
குழிவிழுந்து சொத்தையாகி எடுத்துவிட வேண்டிய நிலையை
அடைகிறது.

   பல் கெட்டால் உடல் கெட்டுவிடும். பற்களைச் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பற்களை மாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தால் பயனில்லை
ஈறுகளை காலையில்  2, 3, நிமிடங்கள் விரலால் அழுத்தித் தேய்து
மசாஜ்  ( Massage ) செய்ய வேண்டும். அப்படிச் செய்து வந்தால் 80 வயது
ஆனாலும் பற்கள் விழாது. மற்றும் பற்களைச் சாம்பல்,கரகரப்பான
பற்பொடியைக் கொண்டு தேய்க்க கூடாது. பல் தேய்ந்து ஒளி மங்கி
விடும்.

  மேனாட்டு மருத்துவத்தில் கண்களுகென்றும், காதுகள், மூக்கு,தொண்
டைகென்றும், பற்களுக்கென்றும் தனித் தனி மருத்துவம் செய்யப்பட்டு
நம் நாட்டிலும் அரசினர் தனி மருத்துவ பயிற்சி அளித்து வருகிறார்கள்
ஆங்கில நாட்டிலும் உலக சுகாதார கணக்கின் படி  16 வயதுக்கு உட்
பட்ட சிறுவர்களில்  36 சதவிகிதம் அதாவது 3 ல் ஒரு பங்கு செயற்கை
பற்கள் பொருத்தியுள்ளனர். இதனை  ( WHO  Magazine, December 73 )ல் 
வெளியீட்டுவுள்ளது. மிக்க நாகரீக படைத்துள்ள மக்களுள் இந்த 
நிலைமை பரிதாபமானது. ஆராய்ச்சிக்கு தென்படாமல் ஒரு பல்லில்
நோய் கண்டதும் மற்ற பற்களுக்கும் நோய் பரவிவிடும் என்ற பீதியில்
பற்கள் அனைத்தையும் பிடுங்கி பறிமுதல் செய்துவிட்டு செயற்கை
பற்கள் பொறுத்தி விடுவதை வழக்கமாகி விட்டது. 

     பற்களுக்கென்று தனி நோய் கிடையாது! மனித உடலில் அவை
முக்கியமான புனித வேலையை செய்து வருகின்றன்.எவ்வித கடினமான
தின்பண்டங்களையும் பற்கள் மென்று  அமிழ் நீருடன்  கலக்கச் செய்து
நாவிற்கு மிகுந்த ருசியை உண்டாக்கக் காரணமாவதோடு, தின்பண்டங்
களை வாயிலிருந்து தவறி  விழுந்து விடாமல் தடைசெய்யும் தொழி
லையும் மேற்கொள்ளுவது யாவரும் அறிந்த விஷயம்.                     “ கைமாறு கூறாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தி
                        தம்மாலியலுதவி தாம்செய்வார் -- அம்மா!
                        முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
                        விளைக்கும் வலியனதாம் என்று.”

       தாம் வருந்தி பாடுபட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக்
குணமுள்ள பெரியோருக்கு ஒப்பாக பற்களை உபமானமாகக் காட்டி
பெரியோர் செய்து வரும் சேவையை ஒப்பிட்டிருப்பதும் பொற்றத்
தக்கதாகும்.

       வாலிப வயதுக்கு முன்னதாகவே பற்கள் போய்விடும் நிலை ஆண்
பெண்களுக்கு வந்துவிட்டால், முகம் வசீகரம் அற்றுப் போவதுடன்
வாய்ப் பேச்சும் குழறும். ஆகரங்களைச் சுவைக்கும்முன் அழுத்துக் 
கடித்துண்ணும் நாவுணவில் ஒன்று பாழாகிவிடும். மேல் நாட்டார்
தின்பண்டங்கள்  வகைகளில் சிறுவர்களுக்குச் சுவைக்கும் முன்
அழுத்திக் கடிக்கும் கரும்பு, முறுக்கு, தேன்குழல், போன்ற கடினமான
பொருள்கள் கிடைப்பதில்லை. ரொட்டி, பிஸ்கட், கேக், கீரீம் போன்ற
இலகுவாகச் சுவைத்து உண்ணும் உணவு வகைகளே மேல்நாட்டவர்
களுக்கு திட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

     உணவைப் பலமாகக்  கடித்து உண்ணும் பிராணிகளுக்குத் திடமான
 பற்கள் அமைந்து செயல்படுவதைக் காணலாம். எலி, நாய், அணில்,
குரங்கு, புலி, சிங்கம் போன்ற பிராணிகளுக்கு அதன் ஆயுள் காலம்
உள்ள வரையுலும் பற்கள் ஆட்டம் கூட இருக்காது. காரணம் பலமான
கொட்டை, மரம், எலும்பு முதலியவற்றை அழுத்திக் கடித்து தின்பதாலே
பற்கள் பலமானதாக இருக்கின்றன. நாய்களுடைய பற்கள், எல்லா
பிராணிகளுக்கும் இருப்பதைவிட  பலமானவை காரணம் அவை 
எழும்பிலுள்ள மாமிசன் முழுவதையும் தின்ற பின்பும், வெகுதூரம் 
அந்த எலும்பை த் தூக்கிச் சென்று கடிப்பதாலேஅமிலம் வெளியாகி
பற்கள் உறுதிப்படுகின்றன. ஆகவே அழுத்திக் கடித்து உண்ணும் 
உணவு வகைகள் நம் பண்பாட்டில் கையாண்டு வருவது ஒப்பற்றது.


     அதிகாலையில் முதற்பணியாகப் பல் துலக்குவது நல்ல பழக்க
மாகும். பற்களிலிருந்து வெளியாகும்  துர்நீர்கள் காலை நேரத்தில்
இலகுவாகக் கழியும் தன்மை பெறுகின்றன.நவீனமுறையில்
பற்பசையை கொண்டு  ( Tooth Brushes ) பல் துலக்கி வருகிறார்கள்
அவைகளை உபயோகிக்கு முன்னும், பின்னும் சுடுதண்ணீரில்
தேய்த்து கழுவது முக்கியமாகும். இப்படி சுத்தம் செய்யாமல் இருந்
தால்  ஈ, கொசு, பல்லி போன்றவைகளால் நோய் தொற்று ஏற்படலாம்
இரவு நேரத்தில் மூலிகை பல் பொடிகளை கைவிரலால் துலக்குவதே
பற்களிலுள்ள எனாமல்  ( enamel ) போகவிடாமல் காப்பாற்றுவதாகும்.


     

 
          சித்தர்கள் கையாண்ட கரிப்பான் தூள், ஆல விழுது, நாயுருவி, 
கருவேலம் பட்டை, வேப்பம் பட்டை,கிராம்பு,கடுக்காய்  இவற்றின் பொடியை  உப்புடன் சேர்த்து பல் துலக்குவதால் அமிலம் வெளியாகி பற்கள் உறுதிப்படும். சிரசிலுள்ள கட்டுக் கிடையான பித்தநீர் வெளி
யாவதே குறிக்கோளாகக் கொண்டு பற்களை சுற்றியுள்ள எல்லா
பாகங்களையும், நாவையும், தொண்டை சளியையும் தினந்தோறும்
சுத்தம் செய்து வந்தால் உடல் சம்பந்தபட்ட எந்த நோயும் உண்டாகாது.

                                 மூலிகை பல் பொடியின் பயன்கள்

     பல் கறை நீங்கும், பல் முத்துப்போல் ஒளி தரும்,வாயின் துர்
நாற்றம் ஒரே வேலையில் நீங்கும், தொண்டைச் சளி வெளியாகும்,
நாக்கு சுத்தமாகும், பல் ஈறில் இரத்தம் வராது, அமில நீரால் ஈறு
வளராது,  புழு உண்டாகாது, பல் சொத்தை கருப்பு நீங்கி வலி வராது
பல் ஆட்டம் உறுதியாகும்,இப்பல்பொடி சித்தர்கள் கையாண்ட அனுபவ முறையாகும். பக்க விளைவுகள் கிடையாது. குறிபிட்ட அனைத்தும் உண்மை  தேவைக்கு பயன்பெறலாம்...
 


                                   பல் நோய் வர காரணங்கள்

         அவசரமாக பல் துலக்குவதாலும், பல் துல்க்காமலே  காபீ, டீ 
போன்ற பானங்களை பருவதாலும், சிறு குழந்தை பருவங்களில்
சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை இரவு நேரங்களில்
சாப்பிட்டு  வாயை சுத்தம் செய்யாமல் இருப்பதாலும், பலவித நோய்
கள் உண்டாவது நிச்சயம்.  ஈறுகளில் தடிப்பாவது புண் புரைகளாவது
உண்டாவதற்கு கட்டாயமாக மருத்துவம் செய்து கொள்வது நல்லது.
புகையிலை, சிகரெட், பட்டணம்பொடி போன்ற லாகிரி வஸ்துகளை
வாயில் அடைக்கி வைப்பது கொடிய பழக்கமாகும்.அப்படி அடக்கி
வைப்பதால் அமிலம் கட்டி நோய் கிருமிகள் அதிகரித்து  பயோரியா
அல்லது பல் பவுந்திரம்  மற்றும் கன்னப்புற்று, தொண்டைப் புற்று,
போன்ற கொடிய நோய்களுக்கு இடஉண்டாகும். உணவு உட்கொள்ளும்
முன்னும், பின்னும் வாயை நன்றாகச் சுத்தம் செய்வது ஒவ்வொரு
வரின் கடமையாகும். வேறு நோய் வந்துவிடும் என்று பயந்து பற்கள்
முழுவதயும் பிடுங்கிவிட்டு செயற்கைப் பற்கள் பூட்டிக்கொள்வது
ஜீரணசக்தி குறைந்து உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்.
மற்ற நோய்களும் தீராமல் தொல்லை கொடுக்கும். இதனை தவிர்க்
கவும், வருமுன் காக்கவும், இந்த சதுரகிரிஹெர்பல்ஸ் மூலிகைப்
பல்பொடியை அறிமுகம் செய்கிறோம்.
 


  
        


                          

வயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.

                        வயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.

                                      

      இன்று பெருமளவில் பெருகி திருவிளையாடல் புரியும் நோய்களில்
வயிற்றுப் புண்ணும்  [peptic ulcer] ஒன்று இதில் குடற்புண்ணும் [duodenal ulser]
அடங்கும். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நின்று  இன் நோய்
நிலவுகிறது.

     ‘ உலகிலேயே இந்தியாவில் தான் வயிற்றுப்புண் நோயாலிகள் 
அதிகம். அதிலும் குறிப்பாக  தமிழ் நாட்டில் தான் மிகுதியாக உள்ளன.
காரணம்; மின்னல் வேகத்தில் உணவுகளை சாப்பிடுவது. சத்து குறைந்த
உணவினை மிகுதியாக உண்பது.  காரம், புளி, மிகையாக உணவில் 
சேர்ப்பது, வெறும் வயிற்றில்  காபி, டீ, அருந்துவது’ என்று மருத்துவ
ஆய்வாளர்கள் அறிக்கையில் அறிவித்துள்ளன.

     நம் முன்னோர்களுக்கு இத்தகு நோய் அதிகமில்லை.அவர்கள் விடி
யற்காலம் நீராகாரம்  பால்,  மோர் மிகுதியாக சேர்த்துக் கொண்டார்கள்
இயற்கை தரும் மருந்துகளான கீரை வகைகளை அடிக்கடி சாப்பிட்டனர்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அதனால் நோயற்ற வாழ்வில்
 வாழ்ந்தார்கள்.

    ஆனால் நாமோ! படுக்கை விட்டு  எழுந்தததும் காபி, டீ, முகத்தில் தான் 
விழிக்கின்றோம். சிங்கல் டீ  பீடியோடு காலந் தள்ளுகின்றோம். பேட்ரி
செல், சல்பேட் ஆகியவைகளைப் போட்டுத் தயாரித்த சாராயத்தை
பிரசாதகமாக பயன்படுத்துகிறோம். அதற்கேற்ப புளி, காரம் அதிகமாக
உணவில் அழுத்துகின்றோம். செயற்கை விடயங்களான ஆங்கில
மருந்துகளையும், டானிக் போன்ற மாத்திரைகளையும், இடைவிடாது
அதிகமாக விழுங்கி சாகின்றோம்.

                                                 வயிற்றுப் புண்

     வயிற்றுப் புண்  [Gastric Ulcer ] குடல் புண் [Duodenal Ulcer] இரண்டையும்
சேர்த்து தான் பொதுவாக வயிற்றுப் புண் [Peptic Ulcer] என்று குறிப்பிடு
கிறோம். இரைப்பையின் கீழ்ப்பாகத்திலும் சிறு குடலின் முதல் 
பாகத்திலும் இந்த புண் ஏற்படுகின்றது. பெருங்குடல் முடிவில் ஏற்படும்
குடல்வால் அழற்சியும் [appendicitis] இந்த வயிற்றுப் புண்ணில் சேர்கலாம்.
இவற்றையெல்லாம் சேர்த்தே பொதுவாக வயிற்றுப் புண் என்று
கூறுகிறோம்.

                                                      நோய்க் குறி

    வாய்ப்புண் வயிற்றுப் புண்ணிற்கு அறிகுறியாகும். சாப்பிட்டு 1-2 மணி
நேரங் கழித்து அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். வாந்தி எடுத்த
பின் வலி குறையும். வாத்தியில் இரத்தம் கலந்து இருக்கும். வயிற்றில் 
இரைச்சல், உளைச்சல், எரிச்சல் இருக்கும். புளியேப்பம் வாந்தி இருக்கும்.கடுமையான மலச்சிக்கலும்  இருக்கும். சாப்பிட்டு  3-4 மணி
நேரம் கழித்து வ வயிற்றில் வலி வரும்.சாப்பிட்டதும் வலி குறைந்து
விடும்.  இது வயிற்றில் அமிலத் தன்மை [Acidity] அதிகமாவதால் ஏற்படு
வதாகும்.பித்தநீர் [Bile] அதிகமாக சுரப்பாதாலும் வ்யிற்றுப்புண் ஏற்பட்டு
வயிற்று வலி, வாந்தி வரலாம். இரைப்பையில் அழற்சி [Gastritis] செரியாமை [Dyspepsia] வாய்வுப் பொருமல்  [Flatulence] இருக்கும்.

      இரைப்பை விகல்பமுடையவர்க்கே விடக்காற்றின் சேர்க்கை ஏற்பட்டு
அன்னம் வடித்த கஞ்சி போல் பேதியாகும். வாந்தி வரும். இதனையே
காலரா  [Cholera] என்கிறோம். இரைச்சல், நுரைத்தல், புளியேப்பம் ஆகிய
வற்றோடு தோன்றும் வயிற்றோட்டம் [Diarrhoca] இதை உடனே கவனிக்
காவிட்டால்  குடலில் புண் உண்டாகும். பெருங்குடல், மலக்குடல் 
கொதிப்பேறி புண்ணாகி வயிற்றுக் கடுப்பு [Chronic Dysentery] ஏற்படுகின்றது
 இவையெல்லாம் வயிற்றுப்புண்ணிற்குச் சம்பந்தப்பட்டதாகும்.

                                   வயிற்றுப் புண்ணிற்கு காரணம்

     சத்து குறைந்த உணவு, மின்னல் வேகத்தில் உணவு அருந்துதல்,
சாப்பிட்ட உணவை இரைப்பைக்கு சேருமுன் [Tension] கொடுப்பது.
அதிக காரம், புளி, வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிப்பது. போதிய
அளவு நீர் அருந்தாமையும், நீடித்த மலச்சிக்கலும், கூட வயிற்றுப்
புண்ணிற்கு காரணம். அடிக்கடி பட்டினி கிடப்பது, கண்ட நேரங்களில்
ஆடு, மாடுகளை போல் கண்டதைச் சாப்பிடுவது, புகை பிடிப்பது,
புகையிலை போட்டு அதனால் உமிழ்நீரை வீணாக்குவது, வெரும்
வயிற்றில் சாராயம் குடிப்பது, குளிர்சாதன பெட்டியில் மாவு 
பொருட்களை ஒரு வாரம் வரை பத்திரப்படுத்தி உண்பது.கீரைகளை
உணவில் சேர்க்காமல் இருப்பது. அடிக்கடி கோபம் கொல்வது,அதிகம்
கவலைப்படுவது, போதிய அளவு உழைப்போ உடற்பயிற்சியோ இல்லா
மல் இருப்பது, மசாலாப் பொருட்களான இஞ்சி, பட்டை, கிராம், ஏலம்
போன்றவைகளை அடிக்கடி அதிக அளவில் உணவில் சேர்ப்பது ஆகிய
யவைகள் எல்லாம் வயிற்றுப் புண்ணிற்குக் காரங்ணகளாகும்.,


                                    வயிற்றுப் புண் வராமல் பாதுகாக்க

      உணவில் காரம், புளியை குறைக்க வேண்டும். மசாலபொருட்களை
அதிகமாக சேர்க்கக் கூடாது. விடியற்காலம் எழுந்ததும் காப்பி, டீ,
குடிக்க கூடாது. நீராகாரம், பால், தேன் கலந்த நீர், அல்லது தண்ணீர்
அருந்தும் ப்ழக்கத்தை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி
முருங்கை, மணித்தக்காளி, அகத்தி முதலான  கீரைகளை உணவில்
சேர்க்க வேண்டும்.தவறாமல் கிழமை க்கு இரு நாட்கள் கீரை 
உணவில் சேரவேண்டும். புகை, புகையிலை சாராயம் கூடாது.உணவில்
அதிக அளவில் மஞ்சள், வெங்காயம்,சேரவேண்டும். மலச்சிக்கலை
தவிர்க்கவேண்டும். அடிக்கடி பட்டினி கிடப்பதை தவிர்கவும். பிராய்லர்
கோழியை குறைக்கவும். பப்பாளி, தக்காளி, அன்னாச்சி பழங்களை
அடிக்கடி சாப்பிடுவதும் வயிற்றுப் புண்ணிற்கு காரணமாகலாம். எனவே
இதன் படி பயன்படுத்தினால் வயிற்று நோய்கள் காரணமாக டாக்டர்,
போன்ற மருத்துவர்களை தேட தேவையில்லை.

                                     


     நீண்ட நாள் வயிற்றுக் குடல் புண் காயத்தை சரி செய்ய தாமதம்
ஏற்பட்டால் [ Cancer] வரும் கவணம். 

   மேலும் நமது தயாரிப்பில் அல்சர் புண்ணை நிரந்தரமாக குணமாக்க
மணித்தக்காளி சூரணம் பயன் தரும். தங்கள் தேவைக்கு  வாங்கி பயன் பெறலாம்.  

1, அத்திக்காய்  2, ம்ணித்தக்காளி,  3, நிலவேம்பு, 4, மஞ்சள், 5, கடுக்காய்த்
    தோல், 6, அதிமதுரம்  போன்ற சூரனங்களாகும். அவவை


       

    


 

சர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க, முக்கூட்டு கற்பம்!!

        சர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க, முக்கூட்டு கற்பம்!!
                         
                                                             சதுரகிரி மாவூத்து     

           இந்த மூலிகை கல்பம் எங்கும் சாதரணமாக கிடைக்கும்.
மூலிகை வகைகள். 1, பொன்னாங்கண்ணி 2, சிறுசின்னி 3,கரிசாலங்
கண்ணி மஞ்சள் பூவைக்கொண்ட கொடியினம்  இவைகளை தேவை
யான அளவுக்கு எடுத்து  சுத்தம் செய்து  வெய்யிலில் உலர்த்த வேண்டும்.
பிறகு நன்றாக இடித்துப் பொடி செய்து வஸ்திகாயம் செய்து பத்திர
கொடுத்திக் கொள்ளவேண்டும்.

        தினம் அரைத் தேக்கரண்டி அளவு பசு நெய்யில் குழைத்து காலை, மாலை, சாப்பிட்டு வர உடல் சூடு தனிந்து வெட்டை நீங்கும். மேக
அனல் தணியும். தளர்ந்துபோன உடல் கெட்டியாகும்.நோயணுகாது
காத்து நிற்கும் சக்தி கொண்டது இந்த  முக்கூட்டு கற்ப மூலிகை 
கல்பம்  குறிப்பாக நீரிழிவு மேக காங்கை, பலஹீனம்,ஆண்மை குறைவு
நரம்புத் தளர்ச்சி, கை கால் குடைச்சல், போன்ற சர்மநோய்கள உடைய
வர்களுக்கு அந்த  நோய்களை  எல்லாம் நீக்கி உடம்புக்கு நல்ல சக்தியும்
அழகும் வசிகத்தையும் தரக்கூடிய. எளிய முறை கற்பமாகும்.

பஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை!!

                                 பஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை!!

       இம்முறை மிக பழங்காலத்து முறை!மிக சக்தி வாய்ந்த காய கற்பம்
நாம் முன்னோர்கள் கையாண்ட கற்ப சக்தியுடைய மூலிகைகள்.

1, சீந்தில் கொடி,  2, சிவகரந்தை, 3, கீழாநெல்லி, 4, அரிசி திப்பிலி,5, வசம்பு.
போன்ற மூலிகைகளாகும்.இதில் சீந்தில்கொடி கோடைகாலத்தில்
சேகரிக்கப்பட வேண்டும். சிவகரந்தை நல்ல குளிர்காலத்தில் மட்டும்
கிடைக்ககூடியது. கீழாநெல்லி மழைகாலத்தில் தான் பசுமையாக
கிடைக்கும்.அதில்தான் நிறைய சத்துக்கள் தேங்கி நிற்கும். சீந்தில்கொடி
கோடைகாலம் [ சித்திரை, வைகாசி ] தவிர மற்ற நாட்களில் சேகரிப்பது
பயன் தராது. எனவே இம்முறைப்படி பஞ்சரத்தின பற்பம் தயாரிப்பவர்கள்
கவணிப்பது முக்கியமாகும். மேலும் அந்த இந்த காலங்களில் மூலிகை
களை சேகரிப்பதில் இன்னொரு கவனிப்பும் உண்டு அதாவது கடற்கரை
யோரங்களில் உப்பு காற்றுப்பட்டு வலரும் சீந்தில்கொடி, சிவகரந்தை,
கீழாநெல்லி, ஆகியவ பயன்படாது. 

   எனவே இவைகளையெல்லாம் கவனித்து இம்மூன்றையும் சேகரித்து
கல், மண், நீக்கி சுத்தம் செய்து தனி தனி இடித்து பொடிசெய்துவைத்துக்
கொள்ளவேண்டும்.அடுத்து திப்பிலியும், வசம்பும் நல்ல சத்து உள்ளதாக
நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொண்டு அவைகளையும் தனிதனியே இடித்து தூள் செய்து  வஸ்திரகாயம் செய்து வைத்துக் 
கொள்ளவும். இந்த ஐந்து வகையான வேற்படி தூளில் சேர்த்து நன்றாக
சேர்த்து கலந்து வைத்துகொள்ளவும்.

                  இது பஞ்சரத்ன சஞ்சீவி கல்பம் ஆகும். 

உபயோகம்: சிறுவர் முதல் முதியவர்கள் வரையிலும் சாப்பிட்டு 
வரக்கூடிய அமிர்தமாகும். 1, அரிசி எடை சிறுவகளுக்கும், 2 முதல் 
3, அரிசி எடை பெரியோர்களுக்கும் தேனில் தினம் ஒரே வேளை
காலையில் குழைதுண்டு வரவேண்டும்.இப்படி 40, 80, 120, நாட்கள்
தேனில் சாப்பிடவேண்டும்.
     இதனால் இளைத்து துரும்பான உடம்பு பலம் பொருந்தியாகும்.
பருமனாகவும் ஆகும். ந்வீன நாகரிகத்தால் சினிமா, காதல், கண்ட
படி காம உணர்ச்சிகளைத் தூண்டி உடலைப் பாழ்படுத்திக் கொண்டவர்
களுக்கும். அளவுக்க மிஞ்சிய போகத்தால் நாடி நரம்புகள் தளர்ந்து
இளமை வயதிலேயே முதியவர் போல் காட்சியளிக்கும் வாலிபர்
களுக்கும்,இரத்தம் குறைந்தவர்களுக்கும்,அறுவை சிகிச்சைக்குப்
பிறகும் ரத்தப் போக்கால் உடல் சோகையாகி விட்டவர்களுக்கும்.
இது ஏற்ற சமய சஞ்சீவியாகும்.

    மேலும் சக்தியே இல்லாத பசி எடுக்காத சிறுவர்கள் உடம்பு
தேராமல் வளர்ச்சியே இல்லாத சிறுவர்களுக்கும் 1, அரிசி எடை
தேனில் கொடுத்து வருவது மிக்க பயன்தரும்.ஞாபகசக்தியே
இல்லாதா ஆண், பெண் இருபாலரும் இதனை முறைப்படி சாப்பிட்டு
நல்ல குணம்பெறலாம்.

    ஆனால் இந்த பஞ்ச ரத்தின சஞ்சீவி கல்பம் சாப்பிடுவோர் புகை, 
புகையிலை, பொடி, தாம்பூலம், அகத்திகீரை, சிறுகீரை, கடுகு மாமிச
உணவுகள் போதை தரும் லாகிரி குடிவகைகள், வெளியிடங்களில்
சேர்க்கை போன்றவகைகள் இல்லாமல் இருப்பின் எந்த காரணத்
திற்காக கல்பம் சாப்பிட ஆரம்பிகிறோமோஅதுவரையில் மேற்க்
கண்ட பத்தியம் இருப்பது அவசியமாகும்.

    இந்த பத்தியம் மேற்கண்ட ஒரு முறைக்குதான் என்று தவறாக என்ன
வேண்டாம்.  சக்தி தரும் சஞ்சீவி மூலிகைகள்  என்ற நூலில் கண்டுள்ள
அனைத்து முறைகளுக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்தல் வேண்டும். 
                                                    
        கூடிய வரையில் இந்த சக்தி தரும் சஞ்சீவி மூலிகைகளில்
எல்லாவித நோயாளிகளுக்கும் அவரவர் நோய்களுக்கு ஏற்றவாறு
நோய்களை போக்கிக் கொள்ளக்கூடிய கற்ப சஞ்சீவி மூலிகைகளை
அறிமுகப்படுத்தியதுடன் இம் மூலிகைகளை நோயே இல்லாதவர்
களும் கூட வரும் முன் காப்போம் என்று பயன்படுத்தி பலன் அடைய
லாம். குறிப்பாக டயாபடீஸ் என்னும் நீரிழிவு நோயில் உள்ள
பலஹீனத்தை போக்க ஒரு சக்தி தரும் மூலிகையை அறிமுகம்
செய்ததாக வைத்துக்கொள்ளுங்கள். சிறுவர் முதல் பெரியவர்கள்
வரை  ஆண், பெண் இருவருமே நோயின்றி இருக்கும் போதும்
சக்தி தரும் பொருளாக்கிக் கொள்ளலாம்.


     


     இந்த சஞ்சீவி என்ற பெயரே வேறு இதரவித கெடுதல் செய்யாது. 
உடலுக்கும் ஊறு வினைவிக்காது. உயிருக்கும் பயந்தரக் கூடியதாகும்.
வாசக அன்பர்கள்  சக்தி தரும் மூலிகைகளை சமயோசித புத்தியுடன்
கையாண்டு  எல்லாம் வல்ல முருகன் அருள் பெற்று நீண்ட வாழ்நாள்
பெற்று இன்பமுடன் வாழ்வார்களாக!!!  


                               
        
                                              வாழ்க சஞ்சீவி மூலிகைகள்!!!

மனையடி சாஸ்திரமும்,மனை மருத்துவ சிகிச்சையும்!!!

                         மனையடி சாஸ்திரமும்,மனை மருத்துவ சிகிச்சையும்!!!


                                                              
      
                   வீடு அமைய அடிப்படை அத்யாவாசிய குறிப்புகள்!! 

         வீட்டைச் சுற்றியுள்ள தேவதைகள்:   கிழக்கில் இந்திரன்,
தென்கிழக்கில் அக்னி,  தெற்கில் யமன், தென்மேற்கில் பேய்,
மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் குபேரன், வடக்கில் ஈசன்.

 
1,  வீட்டு மனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய
     வேண்டும்.
2,  வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.

3,  மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும்.

4, ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.

5,  வீட்டிக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று

     இருப்பது நல்லது.

6,  வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய்,

     ஏரி, ஆறு இருப்பது நல்லது.

7,  மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில்
     கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

8,  வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கினறு, பம்ப் தீய
      பலன்களைத் தரும்.

9,  வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் 
      அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.

10,வீடுகட்ட கடைக்கால் தோண்டும்போது முதலில் ஈசானியத்தில்
     ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும்.

11, வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில்  ஆரம்
      பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

12,  தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.

13,  வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு,

       வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

14,  பஞ்சபூதாஅற்றல் கிடைக்கு ஈசானிய மூலை காலியாக இருக்க 
       வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.

15,  வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள்
       அமையவேண்டும்.

16,  வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
        
17,  கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும்.

18,  தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத்
       தொட்டி அமைய வேண்டும்,

19,  கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய
       வேண்டும்.

20,  செப்டிக்டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு
       சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.

21,  அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.

22,  வீடு மற்றும் காம்பவுண்டின் வடகிழக்கு மூலை வளைவாக இருக்க
       கூடாது.

23,   மாடிப்படி தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் அமைய
        வேண்டும்.

24,  வீட்டிற்கு தெற்க்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும்.

25,  வடகிழக்கில் குடிநீர் குழாய் இருத்தல் வேண்டும்.

26,  ஈசானிய மூலையில் மண் அமைத்து அருகம்புல், துளசி வளர்பது
       நல்லது. உயரமான துளசி மாடம் கட்டக்கூடாது.

27,  ஆட்டுக்கல், அம்மி, தெற்கு, மேற்கு, தென்மேற்கு,தென்கிழக்கு 
        பகுதிகளில் அமைக்கலாம். வடகிழக்கு பகுதிகளில் அமைக்க
        கூடாது.

28,  .பிரிட்ஜ் கிரைண்டர் போன்ற மின்சாதனப் பொருள்கள் அறையின்
        தென்கிழக்கில் அமைக்கலாம். 

29,  ஈசானிய மூலையில் குப்பை  கூளங்களை குவித்தல் கூடாது.

30,  அக்னி மூலையில் படுக்கை அறை கூடாது.

31,  தெற்கு பார்த்து சமைக்காதீர். மருத்துவ செலவுகளுக்கு வழி கோலும்.

32,   உண்ணல் படித்தல் கிழக்கு நோக்கி இருப்பதுதான் நல்லது.

33,  வடக்கே தலை வைத்து படுக்கை அமைப்பது கூடாது.

34,  ஈசானிய மூலையில் மாடிப்படி கூடாது.

35,  வீட்டின் வடக்கே, கிழக்கே உயராமாக வளரும் நிழல் தரும்
       மரங்கள் வள்ர்க்ககூடாது.

36,  வீட்டின் தெற்கு அல்லது மேற்கே உள்ள உயரமான மரங்களை
       வெட்டக் கூடாது.

37,  ஈசானிய மூலையில் சமையல் அறை கூடாது.

38,  வீட்டின் வடகிழக்கில் நீர்தேக்கத் தொட்டி அமைக்கக் கூடாது.

39,  வீட்டின் வடகிழக்கு தென்மேற்கு மூலையில் கழிவறை மற்றும்
       செப்டிக்டேங்க் அமைக்க கூடாது.

40,  வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும் கிழக்கேயும் உயரமாக அமைக்க
       கூடாது.

41,  வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின்மேல் பூந்தொட்டி வைக்கக்
       கூடாது.

42,  வீட்டின் தென்மேற்கு மூலையில் மெயின்கேட், போர்டிகோ
       தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும்
       சோதனைகளுமே வரும்.

43,  வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.

44,  வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலி மனை நிலங்களை
       வாங்கலாம்.

45,  வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை
       இனமாகக்கூட வாங்கி சேர்க்ககூடாது.

46,  ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்யக்
       கூடாது.

47,  ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு
       அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும் பிறகுதான் வடக்கு
       அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.

48,  ஒரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை
       விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை
       விட கிழக்கில் உள்ள வீடு  தாழ்வாகவும் இருக்கவேண்டும்.

49,  ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து
       அல்லது வீதிசூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும்
       கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.

50,  தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியபாரத்திற்கு ஏற்றது.

51,  மேற்கு வாயு மூலைத் தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது.

52,  வடக்கு வாயு மூலை தெருக்குத்து  பிரச்சினைகள்  தரும். கிழக்கு
       அக்னி மூலை தெருக்குத்து பிரச்சனைகள் தரும்.மேற்கு நைருதி
       மூலை தெருக்குத்தும் பிரச்சனைகள் தரும்.

53,  ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும்,

       4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.

54,  வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும்
       முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின்
       ஈசானியத்தில் வாஸ்து பூஜை  [ பூமி  பூஜை ]செய்தல் மிக நல்லது.

55,  வீட்டை செப்பனிடம் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர
       நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும்
      கவனமாகவும் செய்து முடிக்க வேண்டும்.

56,  வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் 
       பரவாயில்லை பாதியில் நிறுத்தவேக் கூடாது.

57,   முறையான கணக்குகளுடன் செய்யபட்ட பிரமிடுகளை வீட்டில்
        உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்
        சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை 
        வாழவும் வைக்கின்றது.

58,  வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன் மறைவு நேரத்தில்
       செய்யப்படும் அக்னி ஹோத்திரம் சுற்றுப்புரச் சூழலை பாதுகாத்து
       ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே
       செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.

59,  வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்
       தினை அளந்து அதை  9 சம பாகங்களாக்கி  4, 5, 6 வது பாகங்களில்
       தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம். 

60  வீட்டின் தென் மேற்கு சேமிப்பு அறை , படுக்கை அறை, பீரோ, பெட்டி
      வைக்கவும்,

61,  வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது.

62,  வீட்டின் தென்கிழக்கில்தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும்
       படியாக இருத்தல் வேண்டும்.

63,  வீட்டின் கிழக்கில்தான் குளியல் அறை அமைத்தல் வேண்டும்.

64,  வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும்போது கிழக்கு திசை
       பார்த்து சாப்பிட வேண்டும்.

65,  வீட்டின் வட மேற்கில்தான் தானியக் கிடங்கு இருத்தல் வேண்டும்.

66,  வீட்டின் வடக்கில்தான்  பணம் வரவு வைத்தல் எடுத்தல்வேண்டும்.

67,  வீட்டின் வடகிழக்கு திசையில்தான் இறைவழிபாடு/ தியானம் செய்தல்
       உயர்வானது.

68,  வீட்டின் ந்டுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும்.

69,  வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிகமிக உயர்வானது.

70,  எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல்
       இருக்கவே கூடாது.

71,  தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை  செய்தல் வேண்டும்
       விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள்.

72,  தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளி படிமிடமான
       முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடல் நல்லது.

73,  வீட்டின் முன்புறம் பூச்செடிகளும், பின்புறம் பலன் தரும் மரங்களும்
       இருப்பது மிக மிக நல்லது.

74,  வீடு நல்ல காற்றோட்டமான முறையில் ஜன்னல்கள் அமைக்கப்
       கப்பட வேண்டும்.

75,  காலையில் வாசல்புறம் தூய்மை செய்து  கோலமிட்டு, மாலையில்
       மாடதில் விளக்கேற்றி வைத்தல் வேண்டும்,

76,  தங்களால் இயன்றவரை ஏழை, எளிய குழந்தைகளுக்கு தர்மம்
       செய்யுங்கள்,

       மேலே குறிப்பிட்ட சாஸ்திரங்கள் கடைகள் மற்றும் தொழிற்சாலை
கள் போன்ற அனைத்திற்கும் பொருந்தும். எனவே வாஸ்து  சாஸ்திரங்
கள் மூலம் சிறு பிளைகள் இருந்தாலும் குடும்பத்திலும், தொழிலிலும்,
வேலை இடங்களிலும் தேவையில்லா பிரச்சனைகள் வந்து நேரிடும்
இதற்கு பரிகாரமாக சித்த மகான்கள் காட்டிய  அதிசய மூலிகைகள்
கீழே காட்டியுள்ளது.

                                                       

  இந்த அதிசய ஆகாசகருடன் கிழங்கை நாம் இருக்கும் இடத்தில்
வடகிழக்கு மூலையில்  கட்டவேண்டும்.  இந்த அபூர்வ மூலகையின் பெயர் கோபுரம் தாங்கி  இதன் அமைப்பு
பிரமிட் போன்ற  வடிவிலும் பிரபஞ்ச சக்தியையும் ஈர்க்கும் வல்லமை
உடையது. இந்த மூலிகையை நாம் இருக்கும் இடத்தில் தென்மேற்கு
மூலையில் ஜாடியிலோ அல்லது வேருடன் உள்ள செடியை கட்ட
வேண்டும்.

                                              

      
                                                           வாழ்க!!  வளமுடன்!!!

  
           
 
   
 

ஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

                                    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

          
       பிரக்கவிருக்கும் 2015 ஆங்கிலப் புத்தாண்டில் தங்கள் வாழ்வில்
இனிமையும், இன்ப நிகழ்வுகளுடன் கூடிட நிறைவான உடல் நலமும்,
குறையில்லாத குழந்தை செல்வமும், நீங்கா நிறை செல்வமும்,
பேரன்பும் பேரமைதியும் எந்நாளும் நிலை பெற நம்மை ஆளும் தென்
கைலாயம் ஈசன் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்கம் இறையருள் வேண்டி
நோயில்லா வாழ்க்கை பெற எங்களது இனிய புத்தாண்டு   நல்வாழ்த்
துக்கள்!!!!! வாழ்க!! வளமுடன்!!!

என்றும்  அன்புடன்

ஹெர்பல்கண்ணன்